தோனியின் 44வது பிறந்த நாள் கேக் வெட்டும் வீடியோ வைரல்
தோனியின் 44வது பிறந்த நாள்
பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது 44வது பிறந்தநாளை ராஞ்சியில் மிகுந்த உணர்ச்சிகளுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார். 2007-ம் ஆண்டு T20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, IPL டிராபி, சாம்பியன்ஸ் லீக் டிராபி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் சாதனைகளை பெற்றிருக்கும் தோனி, இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றிக்கரமான கேப்டன்.
தற்போது தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக IPL தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் CSK அணி கடும் தோல்வியடைந்து 10வது இடத்தில் முடித்தது. இதனால், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பதில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
தோனியின் உடல் நிலை காரணமாக அவர் ஓய்வெடுக்கக்கூடும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் தோனி, “எனது முடிவை இன்னும் ஏழு மாதங்களுக்கு பிறகு எடுக்கிறேன்” என்று விளக்கமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி தோனி தனது 44வது பிறந்த நாளை ராஞ்சியில் தனது பழைய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தோனி கேக் வெட்டி நண்பர்களுக்குப் பகிரும் அழகிய தருணங்களில் தோனியின் நண்பர்கள் அவரை மனமுவந்து வாழ்த்தினர்.
உயரமான நிலைக்கேறியும் பழைய நண்பர்களை மறக்காத தோனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில், அடுத்த IPL தொடர் தொடங்கும் போது தோனி ஏற்கனவே 45 வயதை எட்டவிருக்கிறார். இதனால், உடல் நலனை கருத்தில் கொண்டு அவர் விரைவில் IPL-இல் இருந்து ஓய்வு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
