ம.தி.மு.க. எந்த தொகுதியில் போட்டியிடும்? விரைவில் தீர்மானம்
ம.தி.மு.க. எந்த தொகுதியில் போட்டியிடும்? விரைவில் தீர்மானம்
ம.தி.மு.க எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவு செய்வார் எனத் துரை வைகோ உறுதியாக கூறினார்.
திருச்சி: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., திருச்சியில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக மதிமுக இருப்பதை எடுத்துக் காட்டும் நிகழ்வாக அமையும் என தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தவறு என்று வைகோ முன்பு கூறியிருந்தாலும், தனது கருத்துக்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையோ அல்லது அதிமுகவையோ இழிவுபடுத்தவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
மல்லை சத்யா விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, இது குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என தெரிவித்தார். மதிமுக தொண்டர்கள் அல்லது நிர்வாகிகள் திமுகவில் சேரவில்லை என்றும், சிலர் கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். அவர்கள் வேறு இயக்கங்களில் சேருவது அவர்களது உரிமை எனவும் சொன்னார்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனக் கூறியதாக பரவும் தகவல் உண்மையல்ல. வைகோ கோபப்படக்கூடியவர் தான், ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் கூறினார். பொடா சட்டம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் வைகோ நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார் என்றும், பத்திரிகையாளர்களை அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது என வலியுறுத்தியதை நினைவூட்டினார்.
கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் வலியுறுத்தவில்லை என்றும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தேர்தல் நேரத்தில் கூட்டணி தலைமையுடன் ஆலோசித்து தலைவர் தான் முடிவு செய்வார் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
