பகுதிநேர ஆசிரியரின் உயிரிழப்பு: ஜவாஹிருல்லா பரபர கோரிக்கை

0
ஜவாஹிருல்லா பரபர கோரிக்கை

பணி நிரந்தரம் கோரி போராட்டம். திருவண்ணாமலை ஆசிரியர் உயிரிழப்பு. ஜவாஹிருல்லா உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை.

பணி நிரந்தரம் கோரி போராட்டம். திருவண்ணாமலை ஆசிரியர் உயிரிழப்பு. ஜவாஹிருல்லா உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை.

திருவண்ணாமலை: பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக பலர் கைது செய்யப்பட்டதோடு, சிலர் ஆர்ப்பாட்டத்திற்கு வருமுன்னே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் 2012 முதல் ரூ.12,500 மாத சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது 12,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் வாரம் 3 நாட்கள் கற்றல் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது பணி நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஓவியப் பகுதி நேர ஆசிரியர் பார்த்தசாரதி, போராட்டம் முடிந்து வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி அறிந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹச். ஜவாஹிருல்லா, பார்த்தசாரதியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நீதிமையானது என்பதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *