திருப்பரங்குன்றம் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் ஜூலை 14ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜூலை 14 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரம்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் ஜூலை 14ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜைகள் பல்வேறு காலங்களில் நடைபெற்று வருகின்றன.
75 யாககுண்டங்கள் கொண்ட யாகசாலை விழா, கடந்த வாரம் தொடங்கப்பட்டு நேற்று காலை 2-ம் கால, மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 4-ம் கால, மாலை 5-ம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
இதில் 150 சிவாச்சாரியர்கள் பங்கேற்று வேள்வி நடத்தினர். மேலும் 7 பெண் உள்பட 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடைபெற்றது. கோவிலின் 125 அடி உயர ராஜகோபுரம் மீது கலசங்கள் பொருத்தப்பட்டு கம்பீரமாக கம்பவிழா நடைபெறவிருக்கிறது.
மகா கும்பாபிஷேக விழாவுக்காக ரூ.2.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருவதால், விழா மிகுந்த பக்திப் பரவசத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உள்ளூர் விடுமுறை ஜூலை 14 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜூலை 19 (சனிக்கிழமை) அன்று வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
