கோவில்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப்பள்ளியில் இசைக்கருவி மற்றும் நுண்கலை வகுப்புகளுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இசை, நுண்கலை வகுப்புகளுக்கான புதிய கட்டடங்களை ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப்பள்ளியில் இசைக்கருவி மற்றும் நுண்கலை வகுப்புகளுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி, லிபர்டி நிறுவன உரிமையாளர் எஸ்.எஸ்.டி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் அமைக்கப்பட்ட கட்டடங்களில்:
- அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதின் கீழ் ₹10 லட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவி வகுப்பு கட்டிடம்
- பொ. சூசையம்மாள் நினைவாக, பொன்னூஸ் நேச்சுரல்ஸ் சார்பில் ₹26 லட்சம் மதிப்பீட்டில் நுண்கலைக் கட்டிடம்
ஆட்சியர் இளம்பகவத், மாணவர்கள் வாசித்த இசைக்கருவிகள் மற்றும் ஆடிய நுண்கலை நடனங்களை பாராட்டினார். நன்கொடை அளித்த நிறுவன உரிமையாளர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மரிய ஜான் பிரிட்டோ, சேகர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரெங்கம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் உலகு ராணி, சித்ராதேவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் உதவித் தலைமை ஆசிரியர் உஷாராணி நன்றி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா வரவேற்றார்.
