சிறகடிக்க ஆசை நடிகர்கள் சம்பள விவரம் வெளியானது

0
Siragadikka Aasai serial

Siragadikka Aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் உட்பட நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி வசந்த் (முத்து) மற்றும் கோமதி பிரியா (மீனா) நடித்துவருகிறார்கள். தற்போது இந்த தொடரில் நடிப்பவர்கள் பெறும் சம்பள விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகிய இருவரும் ஒரு நாள் சம்பளமாக ரூ.12,000 பெற்றுவருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜயா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் (முத்துவின் பெற்றோர்) தலா ரூ.8,000 சம்பளமாக பெறுகிறார்கள்.

சல்மா, ரோகிணி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கி வருகிறார். அவரும், அவரது கணவர் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா இருவரும் தலா ரூ.6,000 சம்பளமாக பெற்றுவருகிறார்கள். பிரித்தா ரெட்டி மற்றும் பிரனவ் மோகனன் ஆகியோர் தலா ரூ.5,000 சம்பளமாக பெறுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

தற்போதைய கதையின் திருப்பமாக, அருண்-சீதா திருமணம் காரணமாக முத்து – மீனா இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் இருவரும் மனதளவில் ஒருவரை ஒருவர் நேசித்து வருவதால், மீண்டும் சேரக்கூடிய சாத்தியம் அதிகம். இதனால் தொடரின் எதிர்கால எபிசோட்கள் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *