மு.க.முத்துவின் உடல் தகனம்; ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின்மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின்மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து இன்று காலமானார். வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
மு.க.முத்து, கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதியின் மகனாவார். 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர், பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய சொந்த குரலில் பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்திருந்தார். 2006ஆம் ஆண்டு மாட்டுத்தாவணி என்ற திரைப்படத்தில் தேவா இசையில் பாடியிருந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், அவரது உடல் பெசன்ட் நகர் மின்மாயானத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்கையில், “தந்தை, தாயைப் போலவே என் மீது பாசம் காட்டிய அண்ணன் இன்று இல்லை. ஆனால் அவர் காதல், இசை, சினிமா வழியாக நம்மில் என்றும் உயிருடன் இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
