பஹல்காம் தாக்குதல் இந்திய ஒற்றுமை மீது சதி

0
பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

மக்களவையில் பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி உரையாற்றிய தருணம்

பஹல்காம் தாக்குதல் மதம் பெயரில் மக்களை கொன்ற பயங்கரவாத சதி என மோடி கூறினார். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

பஹல்காம் தாக்குதல் இந்தியாவை மத ரீதியாக பிளக்க திட்டமிடப்பட்ட சதி என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்தார். “ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகள், மக்களின் மதத்தை கேட்ட பிறகு சுட்டுக்கொன்றனர். இது கொடுமையின் உச்சம். இந்தியாவை கலவரத்தில் தள்ள திட்டமிட்ட செயல்,” என்றார்.

இதை முறியடித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “நாடு ஒற்றுமையுடன் இருந்ததால் இந்த சதி தோல்வியடைந்தது. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. 22 நிமிடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் பயனின்றி போனது,” என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்த பிரதமர், “இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பின்னணி. இந்தியா தனது தொழில்நுட்ப திறனை நிரூபித்துள்ளது. நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பல விமான தளங்கள் சேதமடைந்தன,” என்றார்.

“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுகளை இனி சகிப்பதில்லை. இந்தியா தன்னம்பிக்கையுடன் பதிலடி கொடுக்கும். உலக நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. ஆனால், காங்கிரஸ் நமது ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கவில்லை,” என்றார் மோடி.

“பாகிஸ்தான் போரை intensify செய்ய முயன்றபோதும், நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம். எந்த வெளிநாட்டுத் தலைவர் நம்மை போரை நிறுத்தும்படி கூறவில்லை. நாமே முடிவெடுத்து அதை முடித்தோம்,” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *