இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். திரையுலகம் இரங்கல் தெரிவிக்கிறது.
பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 17) மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த வேலு பிரபாகரனுக்கு, இன்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலு பிரபாகரன் தனது திரையுலகப் பயணத்தை ஒளிப்பதிவாளராகத் தொடங்கினார். பின்னர், இயக்குநராகவும், நடிகராகவும் புகழ் பெற்றார். 1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், ‘அசுரன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’, ‘சிவன்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற பல படங்களை இயக்கினார்.
நடிகராகவும் மின்னிய வேலு பிரபாகரன், ‘காதல் கதை’, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’, ‘பீட்ஸா 3’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ‘கஜானா’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
அவரது திடீர் மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
