கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது

0
Kiara Advani

கியாரா அத்வானி

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் நடிகர்கள் கியாரா, சித்தார்த், ஆலியா, வருண் ஆகியோருக்கும் பெண் குழந்தைகள் பிறந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணமானதற்கு ஒரு ஆண்டிற்குப் பிறகு, இன்று (ஜூலை 17) பெண் குழந்தைக்கு தாயானார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களுடன் வரவேற்று வருகின்றனர்.

கியாரா மற்றும் சித்தார்த் 2021-ம் ஆண்டு ‘ஷேர்ஷா’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததிலிருந்தே காதலிப்பதாக வதந்திகள் பரவ, அது பின்னர் திருமணமாகத் தொடர்ந்தது. தற்போது அவர்களுக்கு ‘குட்டி மகாலட்சுமி’ பிறந்துள்ள நிலையில், ரசிகர்கள் புதிய ஒற்றுமையை விவாதிக்கத் துவங்கியுள்ளனர்.

2012-ல் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், வருண் தவான் மற்றும் ஆலியா பட் மூவரும் அறிமுகமானார்கள். இந்த மூவருக்கும் தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வருண் தவானுக்கும், ஆலியா படுக்கும் மகள்கள் உள்ளனர்; தற்போது சித்தார்த்தும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

மேலும், கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ‘ஆலியா’ என்பது குறித்த தகவலும் ரசிகர்களிடம் பரவியுள்ளது. பாலிவுட்டில் வரிசையாக பிரபல நடிகைகளுக்கு பெண் குழந்தைகள் பிறப்பது குறித்து “பெண் குழந்தை சீசன் போல” ரசிகர்கள் கலகலப்பாகப் பேசுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *