தமிழகத்தில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, 25 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாற்றம். 2,342 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம.
வேலூர்: தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் பணி விதிகளின்படி, திருப்பூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, நாகர்கோவில், தென்காசி, திருவாரூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 34 தலைமை ஆசிரியர்கள் இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், ராமநாதபுரம், நீலகிரி, சேலம், வேலூர், தர்மபுரி, கடலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய 25 மாவட்ட கல்வி அலுவலர்கள் இப்போது புதிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 2,342 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 14 முதல் 18 வரை, சென்னையில் உள்ள MCC பள்ளி மற்றும் CSI பள்ளி இந்த விண்ணப்பதாரர்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு கவுன்சிலிங்கை நடத்தும்.
நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 23ஆம் தேதி சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் நியமன ஆணைகளை வழங்குகிறார்.
